கூட்டணியில் இருந்து விலகிய முடிவை தேமுதிக மறுபரிசீலனை செய்ய வேண்டும் - வானதி சீனிவாசன்

0 2915

அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகல் என்ற தேமுதிகவின் முடிவு வருத்தமளிப்பதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை தேமுதிக மறுபரிசீலனை செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் பேசிய அவர், அரசியல் கட்சிகள் பெண்களுக்கு வெறும் மாதம் ஊக்கதொகை மட்டும் அல்லாமல் கல்வி , வேலைவாய்ப்பு , பாதுகாப்பு உத்திரவாதம் அளிக்க வேண்டும்.

கருத்துகணிப்புகளை முழுமையாக எடுத்துக்கொள்ள முடியாது,பெண்கள் பாதுகாப்பில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் சிறந்த மாநிலம் தான். குறுகிய காலத்தில் தேர்தல் என்பது அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments