தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உள் அரங்கத்தில் மாஸ்க் அணிய தேவையில்லை : அமெரிக்க மருத்துவ அமைப்பு

0 1179
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உள் அரங்கத்தில் மாஸ்க் அணிய தேவையில்லை : அமெரிக்க மருத்துவ அமைப்பு

முழுமையாக கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்கள் உள்ளரங்குகளில் நடைபெறும் நிகழ்வுகளில் முகக்கவசம் அணியாமல் பங்கேற்கலாம் என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்களுக்கு இடையேயான சந்திப்பின்போது முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்டவை தேவையில்லை எனவும், தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தாலும், தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவோ, பரிசோதனை செய்துகொள்ளவோ அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments