தமிழகம் முழுவதும் அதிமுகவை தோற்கடிக்க தேமுதிக தொண்டர்கள் பணியாற்றுவர் - எல்.கே.சுதீஷ்

0 4409

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ளது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணை செயலாளர் சுதீஷ், அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதை தேமுதிகவினர் தீபாவளியாக கொண்டாடுவார்கள் என்றார்.

பாமகவின் கொள்கை பரப்புச் செயலாளராக கே.பி.முனுசாமி செயல்படுகிறார் என்றும் சுதீஷ் குற்றம்சாட்டினார்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதை தேமுதிகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பார்த்தசாரதி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments