கழிவறைக்குள் எட்டிப் பார்த்து விட்டு சாரி சொன்ன இளைஞன்... கும்மியெடுத்த பெண்!
கொடைக்கானலில் பெண்கள் கழிவறைக்குள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த இளைஞனை அந்த பெண்ணின் காலில் மக்கள் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தனர். எனினும், அந்த பெண் இளைஞன் மீது போலீஸில் புகாரளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனத்துறை அலுவலகம் அருகே தனியார் உணவு விடுதி இயங்கி வருகிறது. இந்த உணவு விடுதியில் கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் உணவருந்த சென்றுள்ளனர். அப்போது, 30 வயது மதிப்புள்ள பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது, கழிவறைக்கு பின் புறம் பொருத்தப்பட்டிருந்த ஜன்னல் வழியாக உணவு விடுதியில் பணிபுரியும் அசாம் மாநிலத்தை சேர்ந்த நம்ஜித் ராஜ் என்பவன் எட்டி பார்த்துள்ளான். இதை பார்த்து விட்ட அந்த பெண் கழிவறையை விட்டு சட்டென்று வெளியே வந்து அந்த ஊழியரிடம் 'ஏன் எட்டி பார்த்தாய் 'என்று கேட்டுள்ளார். அதற்கு, இளைஞன் 'சாரி' என்று அசால்ட்டாக கூறியுள்ளான்.
தொடர்ந்து, அந்த பெண் தன் குடும்பத்தாரிடத்தில் சொல்ல அவர்கள் கோபமடைந்து இளைஞனை தாக்கத் தொடங்கினர். ஹோட்டல் உரிமையாளர், அந்த பெண்ணிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கூறினார். இளைஞன் காலில் விழுந்த போது, அவனை அந்த பெண் கடும் கோபத்துடன் தாக்கினார். பின்னர், அந்த இளைஞனை கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாரளித்தனர் . புகாரின் அடிப்படையில் இளைஞனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Comments