அதிமுக- இந்திய குடியரசு கட்சி இடையே தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை

0 1375
அதிமுக- இந்திய குடியரசு கட்சி இடையே தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை

அதிமுக - இந்திய குடியரசு கட்சி இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறவுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பா.ம.கவுக்கு 23 தொகுதிகளும், பா.ஜ.கவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தேமுதிக மற்றும் தாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் குடியரசு கட்சியுடன் அதிமுக இன்று மாலை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் தங்கமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments