முதியவரிடம் உதவி செய்வது போல் நடித்து ஏடிஎம் கார்டு மூலம் ரூ.70,000 திருட்டு

0 3711
முதியவரிடம் உதவி செய்வது போல் நடித்து ஏடிஎம் கார்டு மூலம் ரூ.70,000 திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வங்கி ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்ய வந்த நபரிடம் உதவி செய்வது போல் நடித்து 70ஆயிரம் ரூபாயை நூதனமாக திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்‍.

ஒன்னல் வாடியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் பழைய பெங்களூர் சாலையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மர்மநபர் ஒருவர், அவருக்கு உதவி செய்வதாகக் கூறி, ஏடிஎம் கார்டை பெற்றதுடன், அதன் ரகசிய எண்ணையும் அறிந்துள்ளார். பணத்தை டெபாசிட் செய்த பின்னர், தேவராஜின் ஏடிஎம் கார்டிற்கு பதில் வேறு ஒரு கார்டை மாற்றி கொடுத்துவிட்டு அந்த மர்மநபர் சென்றுள்ளார்‍.

அவர் சென்ற  சிலமணிநேரங்களில் தேவராஜின் கணக்கிலிருந்து முதலில் 20ஆயிரம் ரூபாயும் பின்னர் 50ஆயிரம் ரூபாயும் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தேவராஜ், வங்கிக்கு தகவல் அளித்து ஏடிஎம் கார்டை உடனே பிளாக் செய்ததால், வங்கி கணக்கில் இருந்த 90ஆயிரம் பணம் தப்பியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments