லத்தீன் அமெரிக்காவில் சம உரிமை வழங்கக்கோரி ஆயிரக்கணக்கான பெண்கள் பேரணி

0 1645
லத்தீன் அமெரிக்க நாடுகளில் சம உரிமை வழங்கக்கோரி ஆயிரக்கணக்கான பெண்கள் பேரணி

பெண்களுக்கு சம உரிமை வழங்க வலியுறுத்தி லத்தீன் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி அர்ஜெண்டினா, கொலம்பியா, சிலி உள்ளிட்ட நாடுகளில் பேரணியில் ஈடுபட்ட பெண்கள், சம உரிமை வழங்க வேண்டும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், பணியிடங்களில் பாதுகாப்பு வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

லத்தீன் அமெரிக்காவில் சுமார் 30 சதவீதம் பேர் தங்கள் நெருங்கிய கூட்டாளிகளாலும், 11 சதவீதம் பேர் வெளி நபர்களாலும் வன்கொடுமைக்கு ஆளாவதாகவும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments