ஸ்பெயினில் நடைபெற்ற பாக்சம் சர்வதேச குத்துச்சண்டை போட்டி : இந்திய வீரர் மனிஷ் கவுசிக் தங்கம் வென்றார்‍

0 1684
ஸ்பெயினில் நடைபெற்ற பாக்சம் சர்வதேச குத்துச்சண்டை போட்டி : இந்திய வீரர் மனிஷ் கவுசிக் தங்கம் வென்றார்‍

ஸ்பெயினில் நடைபெற்ற பாக்சம் சர்வதேச குத்துச்சண்டை இறுதி போட்டியில் இந்திய வீரர் மனிஷ் கவுசிக் தங்கம் வென்றார்‍.

ஆண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் டென்மார்க்கின் நிகோலாய் தெர்ட்யானை எதிர்கொண்ட அவர்,3-2 என்ற கணக்கில் வீழ்த்தி வாகை சூடினார்‍.

ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் அதிர்ச்சி தோல்வியடைந்தார்‍.

ஸ்பெயினின் டியாட் சிசோகாவிடம் 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்‍.

இதேபோல் பெண்களுக்கான 75 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா ராணி, மற்றும் 57 கிலோ பிரிவில் ஜாஸ்மின் ஆகியோர் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments