புதுச்சேரியில் தே.ஜ.கூட்டணியில் என்.ஆர்.காங். 17 இடங்களில் போட்டி?

0 1890
புதுச்சேரியில் தே.ஜ.கூட்டணியில் என்.ஆர்.காங். 17 இடங்களில் போட்டி?

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக-பாமக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு இன்று முற்பகல் 11 மணிக்கு வெளியாக உள்ளது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில், 5 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் தொகுதி பங்கீடு மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக எவ்வித உறுதியும் இன்றி, கடந்த சில நாட்களாகவே இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தையில், தொகுதி உடன்பாடு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்படி முதலமைச்சர் வேட்பாளராக ரங்கசாமி ஏற்கப்பட்டதாகவும், என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களில் போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 13 இடங்களை பாஜக, அதிமுக, பாமக பகிர்ந்து கொள்ளும் என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று முற்பகல் 11 மணிக்கு வெளியிடப்படும் என்.என்.ஆர் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments