பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை நிர்ணயிக்கும் சட்டம் இயற்றும் அதிகாரம் அரசியலமைப்பின் 102வது திருத்தம் பறிக்கிறதா ?

0 725
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை நிர்ணயிக்கும் சட்டம் இயற்றும் அதிகாரம் அரசியலமைப்பின் 102வது திருத்தம் பறிக்கிறதா ?

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை நிர்ணயிக்கும் மற்றும் சட்டம் இயற்றும் மாநிலங்களின் அதிகாரத்தை அரசியலமைப்பின் 102-ஆவது திருத்தம் பறிக்கிறதா என்பது குறித்து பதிலளிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், கடந்த 2018-ஆம் ஆண்டு ‘சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினருக்கான சட்டம் 2018 என்ற சட்டத்தை மாநில அரசு இயற்றியது.

அதை எதிர்த்து முதலில் மும்பை உயர்நீதிமன்றத்திலும் பின்னர் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments