தமிழகத்தில் 84 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து : விதிமீறல்கள், பாதுகாப்பு குறைபாடுகளால் மூட உத்தரவு

0 862
தமிழகத்தில் 84 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து : விதிமீறல்கள், பாதுகாப்பு குறைபாடுகளால் மூட உத்தரவு

மிழகத்தில் 84 பட்டாசு ஆலைகளுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்த அதிகாரிகள், போதிய அளவு பாதுகாப்பு இல்லாததை கண்டுபிடித்தனர்.

தீ விபத்தை தவிர்க்கக் கூடிய வகையில் எந்த நடவடிக்கையும் அங்கு இல்லை.

தரையில் பட்டாசுகளை காய வைப்பது போன்ற விதிமீறல்களைக் கண்டுபிடித்த அதிகாரிகள் அத்தகைய 84 பட்டாசு ஆலைகளை மூட உத்தரவிட்டனர்.

அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து, பட்டாசு ஆலைகள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனிடையே சாத்தூர் தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments