டெல்லியில் மகளிர் தின விழாவில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பங்கேற்பு: பெண்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து வாழ்த்து

0 479
டெல்லியில் மகளிர் தின விழாவில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பங்கேற்பு

நாடு முழுவதும் மகளிர் தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சமூகத்திற்கு பங்களிப்பை வழங்கிய பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்.

சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் இதனை முன்னிட்டு மாநகர காவல்துறை ஆணையர் பெண் போலீசாரை பாராட்டி அவர்களின் சேவையை கௌரவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.சமூகத்திற்கு குறிப்பிட்ட பங்களிப்பு செய்த சாதாரண பெண்களும் இந்த நிகழ்ச்சியில் கொரவிக்கப்பட்டனர்.

எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் சரிதா திவாரி ஒரு சாதனைப் பெண் ஆவார். எல்லையோர பாதுகாப்பு பணியில் இருக்கும் அவர் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் ரோந்து மேற்கொண்டுள்ளார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ,மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு பிரிவினரைச் சேர்ந்த மகளிரை சந்தித்து ரோஜா மலர் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments