ஸ்மார்ட் சிட்டி திட்டம் : கோவையில் வெடித்து சிதறிய பிரமாண்ட விளக்கு!

0 101270
பிரமாண்ட விளக்குகளும் வெடித்து சிதறிய விளக்கும்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை பந்தைய சாலையில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட அலங்கார விளக்கு வெடித்து சிதறியதில் 4 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள், குளக்ங்கள் சீரமைக்கப்பட்டு, நடைமேடையுடன் அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டன.  மேலும், ரூ. 40 கோடி மதிப்பில் கோவை பந்தய சாலையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த பகுதியில் பிரம்மாண்ட அலங்கார மின்விளக்குகளை வட மாநில தொழிலாளர்கள் சிலர் அமைத்து கொண்டிருந்தனர். அப்போது, அலங்கார விளக்கு ஒன்று வெடித்து சிதறியது. இதில், பணியில் இருந்த பவடமாநில தொழிலாளர்கள் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கண்ணாடி துகள்கள் சிதறி நடைபாதை பயிற்சி மேற்கொண்டவர் மீதும் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. ஆனாலும், அதிக சத்தத்துடன் அலங்கார விளக்கு வெடித்து சிதறியதால் அனைவரும் சிதறி ஓடினர்.

தொடர்ந்து, மாநகராட்சி பணியாளர்கள் வெடித்த அலங்கார விளக்கு மற்றும் சிதறிய துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சம்பவத்தை நேரில் பார்த்த ஆட்டோ ஓட்டுனர் கூறுகையில்;- வாடகைக்கு காத்திருந்த நேரத்தில் டமார் என்று பயங்கர சத்தம் கேட்டதாகவும், அப்போது பார்த்த போது பிரம்மாண்டமான அலங்கார விளக்கு வெடித்து சிதறியதாகவும், பணியில் ஈடுபட்டிருந்த வட மாநில தொழிலாளர்கள் மீது கண்ணாடி குத்தியதாகவும் கூறினார். மேலும், நடைபயிற்சி மேற்கொள்ளும் இந்த இடத்தில் இது போன்ற பிரமாண்ட விளக்குகள் தேவை இல்லாத ஒன்று, நல்ல வேளையாக பெரிய அளவில் காயம் ஏற்படாதவாறு தப்பியுள்ளனர்'' என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments