லட்சத்தீவு அருகே சிக்கிய 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள்

லட்சத்தீவு அருகே 2,100 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருள்களை கைமாற்ற நடைபெற்ற முயற்சியை இந்திய கடலோரக் காவல் படையினர் முறியடித்தனர்.
இலங்கையில் இருந்து வந்த மீனவர் படகுகளை கடலோர காவல் ரோந்துப் படையினர் கண்காணித்த போது சந்தேகத்திற்கிடமாக மூன்று படகுகள் சிக்கின. இதில் ஒரு படகு 15 நாட்களாக கடலிலேயே சுற்றிக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது.
சில வெளிநாட்டு கப்பல்களும் அப்பகுதியில் சுற்றி வருவதை கவனித்த கடலோரப் படையினர் மீனவர் படகுகளை சுற்றி வளைத்தனர்.பிடிபடுவோம் என அஞ்சிய கடத்தல்காரர்கள் சுமார் 260 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்களை கடலில் வீசியெறிந்தனர். இவற்றின் சந்தை மதிப்பு 2100 கோடி என்று கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments