ஜே இ இ முதன்மைத் தேர்வில் 6 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

ஜே இ இ முதன்மைத் தேர்வில் 6 மாணவர்கள் 100க்கு 100
ஜே இ இ எனப்படும் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுதேர்வின் முதன்மைத் தேர்வில் 6 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
கடந்த மாதம் நடந்த ஜே இ இ முதன்மைத் தேர்வுகள் நடத்தப்பட்டன. 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்த நிலையில் 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தற்போது இந்தத் தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளன.
இந்தத் தேர்வில் டெல்லியைச் சேர்ந்த இருவர், ராஜஸ்தான், சண்டிகர், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த தலா ஒரு மாணவர்கள் வீதம் ஆறு பேர் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
Comments