கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க முயன்ற வீரர்கள் 9 பேர் உயிரிழப்பு

0 1663
கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க முயன்ற வீரர்கள் 9 பேர் உயிரிழப்பு

கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர்.

ஸ்ட்ராண்ட் சாலையில் உள்ள ரயில்வே வணிக வளாகக் கட்டடத்தில் ஏராளமான கடைகள் அலுவலகங்கள் இயங்கி வந்த நிலையில் 13 வது மாடியில் இரவில் தீ விபத்து ஏற்பட்டது. 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க முயன்றன.

அப்போது சில தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் லிப்டில் மாடிக்கு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. லிப்ட் சிக்கிக் கொண்டதில் 4 தீயணைப்பு வீரர்கள் இரண்டு காவலர்கள் ஒரு ரிசர்வ் படை வீரர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் மமதா பானர்ஜி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments