பஞ்சாப் சட்டப்பேரவையில் 10 எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ரத்து என சபாநாயகர் அறிவிப்பு

பஞ்சாப் சட்டப்பேரவையில் 10 எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ரத்து என சபாநாயகர் அறிவிப்பு
பஞ்சாப் சட்டப்பேரவையில் 10 ஷிரோமணி அகாலி தள எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் ராணா கே பி சிங் அறிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநரின் உரையின் மீது முதலமைச்சர் அமரீந்தர் சிங் உரையாற்றினார். அப்போது இடையூறு செய்ததாக பத்து ஷிரோமணி அகாலி தள எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று 2021-22க்கான தனது பட்ஜெட் நிதியமைச்சர் தாக்கல் செய்தார்.
அப்போது எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட ஷிரோமணி அகாலி தள எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்ததால் சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் இன்று நடக்கும் பட்ஜெட் விவாதத்திலும் அவர்கள் பங்கேற்கலாம் எனவும் சபாநாயகர் கூறினார்.
Comments