குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகை

0 1763
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகை

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 3 நாட்கள் பயணமாக தமிழகத்திற்கு இன்று வருகிறார். மாலை டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை வரும் அவர் இரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.

நாளை சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக வேலூர் பொற்கோவிலுக்கு செல்கிறார். அதன்பின்பு தனியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.

இதனை தொடர்ந்து நாளைமறுநாள், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். இதனை தொடர்ந்து அவர் அன்று பிற்பகலில் சென்னையிலிருந்து தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments