தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

0 8844
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு முதல் வட கடலோர கேரள வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்றும் நாளையும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழையும், பிற தென் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments