சென்னையில் இன்று நடக்கிறது தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் அவசரக் கூட்டம்

0 2476
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் அவசரக் கூட்டம் இன்று நடக்கிறது

அதிமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், 13 இடங்கள் மட்டுமே ஒதுக்கமுடியும் என அதிமுக திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் 41 தொகுதிகளை ஒதுக்குமாறு தேமுதிக வலியுறுத்திய நிலையில், அடுத்தடுத்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து 23 தொகுதிகளாவது ஒதுக்குமாறு அக்கட்சி கேட்டுக்கொண்டது. ஆனால், தேமுதிகவுக்கு 13 இடங்கள் மட்டுமே ஒதுக்க அதிமுக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 தொகுதிகளில் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து தற்போது 13 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

குறைவான தொகுதிகளையே அதிமுக ஒதுக்க முன்வந்துள்ளதால் தேமுதிக அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், தேமுதிக மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது. இதில் 13 தொகுதிகளை ஏற்பதா, கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதா உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments