திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம் எனப் பேச்சுவார்த்தை

0 2357
திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம் எனப் பேச்சுவார்த்தை

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட 3 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினர். அப்போது, மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியுடன் நடத்தப்பட்ட 2வது கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. கொ.ம.தே.க தரப்பில் 6 தொகுதிகள் கேட்டதாகவும், திமுக தரப்பில் 3 தொகுதிகள் வரை வழங்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதி தமிழர் பேரவை, மக்கள் விடுதலை ஆகிய 3 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

எந்தெந்த தொகுதிகளை எந்தக் கட்சிக்கு ஒதுக்கலாம் என்பதை அடையாளம் காண தி.மு.க. கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்கள் பட்டியலை அளித்துள்ளன. ஓரிரு நாட்களுக்குள் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments