விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: நிவாரண தொகைக்கான காசோலையில் பணம் இல்லாததால் குடும்பத்தினர் அதிர்ச்சி
சேலம்: திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்த வேளாண்துறை உதவி தொழில்நுட்ப பெண் மேலாளர் பணி நீக்கம்

சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்த வேளாண்மை துறை உதவி தொழில்நுட்ப மேலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்த வேளாண்மை துறை உதவி தொழில்நுட்ப மேலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த திலகவதி என்ற அந்தப் பெண், தலைவாசல் வட்டார வேளாண்துறை உதவி தொழில்நுட்ப மேலாளராக தற்காலிகமாக பணிபுரிந்து வந்தார். இவர் ஏற்காடு தொகுதியில் திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தார்.
அரசுப் பணியில் இருந்துகொண்டு தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளிப்பது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால், உரிய விசாரணைக்குப் பின் திலகவதியை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ராமன் உத்தரவிட்டார்.
Comments