தி.மு.க. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டி?

0 2995
திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கலாம் என்பதை அடையாளம் காண பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கலாம் என்பதை அடையாளம் காண பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுததைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளை முடிவு செய்வது குறித்து செவ்வாய்கிழமை இருகட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. விசிக விருப்பப்பட்டியலில் காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, செய்யூர், வானூர், உளுந்தூர்பேட்டை, மயிலம் ஆகிய தொகுதிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் 8 தொகுதிகள் அடங்கிய உத்தேச பட்டியலை திமுகவிடம் வழங்கியுள்ளது. கடையநல்லூர், ஆம்பூர், வாணியம்பாடி, பாபநாசம், சிதம்பரம், திருச்சி கிழக்கு, மணப்பாறை, திருவாடானை ஆகிய 8 தொகுதிகளில் ஏதேனும் 3 தொகுதிகளை ஒதுக்குமாறு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. 3 தொகுதிகளை அடையாளம் காண்பது குறித்து செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

மனித நேய மக்கள் கட்சியும் நாகை, ராமநாதபுரம், வாணியம்பாடி, ஆம்பூர், மயிலாடுதுறை ஆகிய 5 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கி, அதிலிருந்து 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து செவ்வாயன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடைபெற இருக்கிறது. இதனிடையே, காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளாக 25 தொகுதிகள் கொண்ட உத்தேச பட்டியலை அக்கட்சி தயாரித்துள்ளது.

அதில், காரைக்குடி, மொடக்குறிச்சி, தொண்டாமுத்தூர், விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர், பட்டுக்கோட்டை, கலசப்பாக்கம், ஆத்தூர், முதுகுளத்தூர், தாராபுரம், உதகை, வேதாரண்யம், முசிறி, ஸ்ரீபெரும்புதூர், மயிலாப்பூர், மதுரை மேற்கு, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, ஓசூர், வாணியம்பாடி, சூலூர்,கடையநல்லூர், ஓமலூர், அறந்தாங்கி ஆகிய 25 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இதனிடையே, திமுகவிடம் மாநிலங்களவை எம்.பி. சீட்டும் காங்கிரஸ் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், திமுகவின் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினர், மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments