தேர்தல் செலவின பார்வையாளர் மது மகாஜன் நாளை சென்னை வருகை

0 788
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து,சென்னையில் நாளை செவ்வாய்க்கிழமை விவாதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து,சென்னையில் நாளை செவ்வாய்க்கிழமை விவாதிக்கப்படுகிறது.

டெல்லியில் இருந்து வந்துள்ள தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளரான பெண் அதிகாரி மது மகாஜன் தலைமையில், பகல் 12 மணிக்கு, தலைமைச்செயலகத்தில் இந்த ஆலோசனைக்கூட்டம் துவங்குகிறது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ மற்றும் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள்.

பணப்பட்டுவாடா, தேர்தல் தில்லுமுல்லுகளை தடுப்பது, பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments