திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் பாஜகவில் இணைந்தனர்

0 2166
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மேலும் 5 பேர் மற்றும் ஒரு வேட்பாளர் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மேலும் 5 பேர் மற்றும் ஒரு வேட்பாளர் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் அம்மாநிலத்தில் வரும் 27 ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் முன்னிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் இணைந்தனர்.

மேலும் ஹபிபூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக கடந்த வாரம்  அறிவிக்கப்பட்டிருந்த சர்லா முர்முவும் பாஜகவில் இணைந்தார்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காதது உள்ளிட்ட காரணங்களால் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments