குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1500 வழங்கப்படும் - அதிமுக தேர்தல் அறிக்கை

0 5859
மகளிருக்கான திட்டமாக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்றும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா 1500 ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

களிருக்கான திட்டமாக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்றும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா 1500 ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் தேர்தல் அறிக்கை மிக விரைவில் வெளியிடப்படும் என்றார்.  உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் 2 திட்டங்களை அவர் வெளியிட்டார்.

மகளிருக்கான திட்டமாக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு  சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்றும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா 1500 ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். 

ஏற்கனவே அதிமுக தயாரித்துள்ள தேர்தல் அறிக்கையில் இருந்து கசிந்த தகவலை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

அதிமுக - அமமுக இணைப்பு என்பது இல்லவே இல்லை என்று முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார். அதிமுகவில் இருந்து விலகிச் சென்ற தொண்டர்கள், நிர்வாகிகள் திரும்ப வந்தால் ஏற்போம் என்றும் அவர் விளக்கம் அளித்தார். வருகிற 12 ஆம் தேதிக்குள் அதிமுக வேட்பாளர் முழுமையாக பட்டியல் வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments