வறுமையின் காரணமாக 2 மகள்களுடன் ரயிலில் இருந்து கீழே குதித்து தாய் தற்கொலை முயற்சி

0 2215
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அருகே வறுமையின் காரணமாக தாய் இரு மகள்களுடன் மின்சார ரயிலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அருகே வறுமையின் காரணமாக தாய் இரு மகள்களுடன் மின்சார ரயிலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

சென்னை செண்ட்ரலில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில் பட்டாபிராம் சத்திரத்தை சேர்ந்த முனிலட்சுமி என்பவர் தனது இரு மகள்களுடன் பயணித்துள்ளார்.

செவ்வாப்பேட்டை அருகே ரயில் சென்றுகொண்டிருந்த போது, முனிலட்சுமி திடீரென தனது இரு மகள்களுடன் சேர்ந்து  ரயிலில் இருந்து கீழே குதித்தார்.

இதில் முனிலட்சுமியின் வலது கை முறிந்த நிலையில், இரண்டு மகள்களுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. முனிலட்சுமியின் கணவர் 2 மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால், வறுமையால் தவித்து வந்த முனிலட்சுமி மகள்களுடன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments