இந்திய போர் கப்பல்களில் முதல் முறையாக மகளிர் அதிகாரிகள் நியமனம்

0 795
இந்திய போர் கப்பல்களில் முறையாக பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய போர் கப்பல்களில் முறையாக பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மகளிர் தினத்தை ஒட்டி இந்திய கடற்படை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. போர் கப்பலான ஐ.என்.எஸ்.விக்கிரமாதித்யாவில் பெண் அதிகாரிகள் இருவரும், கடற்படையின் சரக்கு கப்பலான ஐ.என்.எஸ்.சக்தியில் பெண் அதிகாரிகள் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்தி கப்பலில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள இருவரில் ஒருவர் மருத்துவர். 23 ஆண்டுகளுக்கு முன்னர் கடற்படையில் மகளிர் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட நிலையில், இப்போது தான் முதல் முறையாக போர் கப்பலில் பணியால் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments