கல்பாக்கம் அணுமின்நிலையத்தைச் சுற்றிய 14 கிராமங்களில் பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

0 10541
கல்பாக்கம் அணுமின்நிலைய கதிர்வீச்சுக்கு உட்பட்ட 14 கிராமங்களில் பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

கல்பாக்கம் அணுமின்நிலைய கதிர்வீச்சுக்கு உட்பட்ட 14 கிராமங்களில் பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. 

அவசர நிலை பிரகடனத்தின்போது பொதுமக்களை வெளியேற்றுவது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் என்பதால், கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள 14 கிராமங்களில் பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்படுவதாக கடந்த மாதம் 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட பதிவாளருக்கு இது தொடர்பான கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில், பத்திரப்பதிவு செய்யத் தடையில்லை என செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments