கேப்டன் பிரசாரத்துக்கு வருவார் பார்த்து போட்டு குடுங்கய்யா..! பரிதவிக்கும் தே.மு.தி.க

0 9693

அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி உடன்பாடு எட்டப்படாத நிலையில் திருக்கோவிலூர் தொகுதியில் தே.மு.தி.க முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடேசனின் ஆதரவாளர்கள் முரசு சின்னத்துக்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு காலத்தில் கட்டவிரலை உயர்த்தி சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டத்தை கவர்ந்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தொண்டர்கள் பலம் குறைந்து கூட்டணிக்காக பெரிய கட்சிகளின் முடிவுக்காக காத்திருக்கும் நிலை தே.மு.திகவுக்கு ஏற்பட்டுள்ளது..!

இந்த சட்ட மனற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதாக கூறிவரும் தே.மு.தி.க முதலில் 41 தொகுதிகள் கேட்ட நிலையில் அதிமுக தரப்பில் 13 தொகுதிகள் தருவதாக கூறியுள்ளனர். 41ல் இருந்து 30, 25, 23, 20 என தேமுதிக இறங்கி வந்தாலும் அதிமுக 13 தொகுதிக்கு கூடுதலாக ஒரு தொகுதி கூட சேர்த்து வழங்கும் மன நிலையில் இல்லை என்று கூறப்படுகின்றது..!

இதனால் இறுதியாக 15 தொகுதியாவது ஒதுக்குமாறு கெஞ்சும் மன நிலைக்கு தேமுதிக பேச்சுவார்த்தை குழு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் பல கட்சிகளுக்கு அல்வா கொடுத்து மக்கள் நலக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளரான விஜயகாந்தின், முதன்மை கட்சியாக அறிவிக்கப்பட்ட தேமுதிக, போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோற்று தேய்ந்து போனதால் எத்தனை சீட்டுக்கள் கிடைக்கும் என்பதே தெரியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் திருக்கோவிலுர் தொகுதியில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் போட்டியிடுவதாகவும் அவருக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க கோரியும், முக நூலில் அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளதால் கூட்டணியில் குழப்பம் ஏற்ப்பட்டு உள்ளது.

இதனை பார்க்கும் போது, ஒரு வேளை கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் தனித்து களமிறங்க தேமுதிக தயாராகி வருகின்றதோ ? என்று கேள்வியையும் எழுப்பியுள்ளது, திருவெண்ணை நல்லூர் ஒன்றிய தேர்தல் பணிக்குழுவினரின் இந்த பிரச்சார போஸ்டர்கள்..!

அதே நேரத்தில் கூட்டணியில் எப்படியும் திருக்கோவிலூர் தொகுதி தே.மு.தி.கவுக்கு ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் தேர்தல் பணியில் இறங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments