ரூ.1 க்கு பிரியாணியா..! உழைக்கும் மகளிருக்காக சிறப்பு ஆஃபர்

0 5402

ழைக்கும் பெண்களை கவுரவிக்கும் விதமாக திண்டுக்கல்லில் உள்ள உணவகம் ஒன்றில் டோக்கன் முறைப்படி ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் அலைமோதியது.

பிரியாணி..! என்ற வார்த்தையை கேட்டால் போதும், அசைவ பிரியர்களுக்கு நாக்கில் எச்சில் ஊறும். ருசி மிகுந்த பிரியாணியை சாப்பிட நீண்ட தூரம் பயணிப்பவர்களும் உண்டு. உணவில் பிரியாணிக்கு என உலகமெங்கும் தனித்தன்மை இருந்திட, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணியை விரும்பாதவர்கள் இல்லை என்றே கூறலாம்.

சுப நிகழ்வுகளிலும், திருமணம், திருவிழா போன்ற காரியங்களிலும் பிரியாணி வழங்குவது சம்பிரதாயமாகவே மாறி வருகிறது. இத்தகைய பிரியாணிக்கு பெயர் போனது திண்டுக்கல். ருசியாலும் மணத்தாலும் அனைவரையும் சுண்டி இழுக்கும் தலப்பாகட்டி பிரியாணிக்கு என தனியாக சுவை ரசிகர்கள் உள்ளனர். பிரியாணிக்கு பெயர் போன திண்டுக்கல்லில் தான் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. திண்டுக்கல் - கரூர் சாலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட உணவகம் ஒன்று, ஒரே ஒரு அறிவிப்பால் பிரபலமானது.

அதாவது, மார்ச் 8 ம் தேதி உலகம் முழுவதிலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், உழைக்கும் பெண்கள் கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள். சற்று வித்யாசமாக யோசித்த திண்டுக்கலில் உள்ள உப்புக்கறி உணவகம் உழைக்கும் பெண்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு ரூபாய்க்கு ஒரு ப்ளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பால் உப்புக்கறி உணவகத்திற்கு படையெடுத்த மக்கள் கூட்டம் ஒரு ரூபாய் பிரியாணியை வாங்க வரிசையில் காத்துக்கிடந்தனர்.

நீண்டவரிசையில் நிற்கப்பட்டவர்களிடம் ஒரு ரூபாய் பெற்றுக் கொண்டு, கையில் ஒரு சிலிப் வழங்கப்படுகிறது. அதனை உள்ளே இருப்பவரிடம் கொடுத்தால் ஒரு பாக்ஸ் பிரியாணி பெறலாம். ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே ஒரு ரூபாய் பிரியாணி விற்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து பிரியாணி வாங்க இளைஞர் கூட்டம் முந்தியடித்தது. எனினும், டோக்கன் மூலம் ஒரு நபருக்கு ஒரு பாக்ஸ் பிரியாணி மட்டுமே வழங்கப்பட்டது.

மகளிர் தினத்தன்று ஒரு ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்த அந்த தனியார் உணவகம் நகரம் முழுவதிலும் பேசுமளாவிற்கு ஒரே நாளில் பிரபலமடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments