அயோத்தியில் ராமர் கோவில் 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்-கோவில் அறக்கட்டளை

0 1354
அயோத்தியில் மூன்றாண்டுகளில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் எனக் கோவில் அறக்கட்டளைச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் மூன்றாண்டுகளில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் எனக் கோவில் அறக்கட்டளைச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டரை ஏக்கர் நிலத்தில் ராமர் கோவிலும், அதைச் சுற்றி மதிலும் கட்டப்படும் எனத் தெரிவித்தார்.

திட்டமிட்டபடி பணிகள் நடைபெற்றுக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் மூன்றாண்டுக்குள் முடிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

ராமர் கோவில் கட்டுவதற்கு ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக அளவாக ஐந்நூறு கோடி ரூபாய் நன்கொடை திரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments