ஸ்டாலின் வாக்குறுதி - பாஜக கேள்வி

திருச்சி திமுக மாநாட்டில் மு.க.ஸ்டாலின் அறிவித்த 7 திட்டங்கள் மத்திய அரசால் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக மாநாட்டில் மு.க.ஸ்டாலின் அறிவித்த எழில்மிகு நகரங்கள், அனைவருக்கும் வீடு, இணைய வசதி ஆகிய திட்டங்கள் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.
தேர்தலில் திமுக வெற்றிபெற்றால் தலித் ஒருவரை முதலமைச்சர் ஆக்குவோம் என அறிவிக்க முடியுமா? என்றும் முருகன் வினவினார்.
Comments