மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் காவல்துறை செயல்பாடுகள் குறித்து உண்மைக்கு புறம்பாக பேசியதாக, ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் 5 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த வழக்குகள் நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில், விசாரணைக்கு வந்தபோது, அவற்றில் ஒரு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, மற்ற நான்கு வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து, விசாரணையை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதேபோல், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கையும், அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் மீதான அவதூறு வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
Comments