விசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை?

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் எவை? - நாளை பேச்சுவார்த்தை
திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும் தொகுதிகள் எவை, எவை என்பது குறித்து நாளை இருகட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 6 தொகுதிகளிலும் விசிக தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறது. இந்த நிலையில், விசிக போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் நாளை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதனிடையே, விசிக விருப்பப்பட்டியலில் காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, செய்யூர், வானூர், உளுந்தூர்பேட்டை, மயிலம் ஆகிய தொகுதிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலுடன் நாளை திமுக தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்து விசிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
Comments