தேமுதிகவிற்கு 13 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க இயலும் என்று அதிமுக முடிவெடுத்துள்ளதாக தகவல்

0 4961

தொகுதி பங்கீட்டில் அதிமுக - தேமுதிக இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், 13 இடங்கள் மட்டுமே ஒதுக்கமுடியும் என அதிமுக திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க தேமுதிக மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நாளை கூடுகிறது. 

அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளை ஒதுக்குமாறு முதலில் தேமுதிக வலியுறுத்தியது. அதற்கு அதிமுக இசைவு தெரிவிக்காததால், இருகட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது. அடுத்தடுத்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, 23 தொகுதிகளாவது ஒதுக்குமாறு தேமுதிக கேட்டுக்கொண்டது. இந்த நிலையில், தேமுதிகவுக்கு 13 இடங்கள் மட்டுமே ஒதுக்க அதிமுக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

9 தொகுதிகளில் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து தற்போது 13 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

13 தொகுதிகளுக்கு மேல் எதிர்பார்க்க வேண்டாம் என அதிமுக தேமுதிகவிடம் திட்டவட்டமாக கூறியதாகவும் சொல்லப்படுகிறது. பாமக, பாஜகவுக்கு ஒதுக்கியதை விட குறைவான தொகுதிகளையே அதிமுக ஒதுக்க முன்வந்துள்ளதால் தேமுதிக அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

இந்த சூழலில், தேமுதிக மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை கூடுகிறது.மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

அதிமுக ஒதுக்கும் 13 தொகுதிகளை ஏற்பதா, கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதா உள்ளிட்டவை குறித்து நாளை நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments