தாமிரபரணி கரையோரத்தில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு

திருச்செந்தூர் அருகே பால்குளம் தாமிரபரணி கரையோரத்தில் சுற்றித் திரிந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
அப்பகுதியில் மலைப்பாம்பு சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் பாம்பை பத்திரமாக மீட்டனர்.
பின்னர் பிடிக்கப்பட்ட பாம்பினை குதிரைமொழி தேரி காப்புகாடுப் பகுதியில் விடுவித்தனர்.
Comments