இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய காவல் வாகனத்தால் இருவர் படுகாயம்.. காவலர் தப்பியோட்டம்..!

0 1325
நாமக்கல் அருகே காவலர் வாகனம் ஒன்று இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

நாமக்கல் அருகே காவலர் வாகனம் ஒன்று இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

பெங்களூருவிலிருந்து தேர்தல் பணிக்காக துணை ராணுவப்படை வீரர்களை அழைத்துக் கொண்டு காவல் வாகனம் ஒன்று நாகப்பட்டினம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

என்.புதுப்பட்டி அருகே முன்னால் சென்ற சரக்கு வாகனத்தை முந்த முயன்று காவல் வாகனம் சாலையின் வலதுபுறம் ஏறியவாறு சென்றது. அப்போது எதிரே வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த சுதாகர் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவர் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய காவல் வாகனத்தின் ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments