ரஃபேல் விமானங்களை தயாரிக்கும் டசால்ட் நிறுவனத்தின் ஒலிவர் டசால்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

0 8431
ஓலிவர் டசால்ட்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ஓலிவர் டசால்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகியுள்ளார்.

ரஃபேல் போர் விமானங்களை தயாரிக்கும் டசால்ட் நிறுவனத்தை தொடங்கியவர் தொழிலதிபர் மறைந்த செர்ஜே டசால்ட். இவரின், மூத்த மகன்தான் ஓலிவர் டசால்ட். போர் விமானங்களை தயாரிக்கும் டசால்ட் மற்றும் லே ஃபிகாரோ என்ற மீடியா நிறுவனங்கள் டாசால்ட் குடும்பத்துக்கு சொந்தமானவை. பிரான்ஸின் நார்மன்டி பகுதியில் உள்ள தன் தன் ஓய்வு விடுதிக்கு ஹெலிகாப்டரில் சென்ற போது, நேற்று விபத்தில் சிக்கி ஒலிவர் பலியானார். தற்போது, ஓலிவருக்கு 69 வயதாகிறது. 

ஹெலிகாப்டர் விமானியும் விபத்தில் உயிரிழந்தார். போர்ப்ஸ் பட்டியலின்படி உலகின் 361 வது பணக்கரரான இவருக்கு 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு சொத்து இருக்கிறது.  கடந்த 2002 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் குடியரசுக் கட்சியில் சேர்ந்த பிறகு, டசால்ட் நிறுவனத்தின் இயக்குநர்கள் பதவியிலிருந்து ஓலிவர் விலகி விட்டார். ஓவிலர் டசால்ட் மறைவுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments