சைலன்சரை கழற்றி, அதிக சத்தத்துடன் பைக்கை ஓட்டிய புள்ளீங்கோக்கள்: தட்டிக்கேட்ட பொதுமக்களை தாக்கி, வீடு, கடைக்கு தீ வைப்பு

0 7824
சைலன்சரை கழற்றி, அதிக சத்தத்துடன் பைக்கை ஓட்டிய புள்ளீங்கோக்கள்

திருப்பதி அருகே சைலன்சரை கழற்றி விட்டு, அதிக சத்தத்துடன்  பைக்கை ஓட்டி சென்ற புள்ளீங்கோக்களை பொதுமக்கள் தட்டிக்கேட்டதால் அவர்களை கற்களை வீசி தாக்கியதுடன், வீடு, கடைகளுக்கு தீ வைத்ததால் பதற்றம் நிலவியது.

தெலங்கானா அடுத்த பைன்சா நகர், சுல்பிகர் காலனியில் தடம் மாறி திறியும் சில இளைஞர்கள் சைலன்சரை கழற்றி விட்டு, காதை கிழிக்கும் சத்தத்துடன், பைக்கை ஓட்டி சென்றுள்ளனர். இதனை தட்டிகேட்ட அப்பகுதி மக்களை இளைஞர்கள் தாக்கியதுடன், அங்கே நிறுத்தி வைத்திருந்த 2 ஆட்டோக்கள், ஒரு கார், இரண்டு பைக் மற்றும் வீடு, கடைகளுக்கு  தீ வைத்ததால் பதற்றம் நிலவியது.

தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் செய்தியாளர்கள் மீதும் கல் வீசி இளைஞர்கள் தாக்கியதில் 2 கான்ஸ்டபில், 3 செய்தியாளர்கள், 4 இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments