வாக்குப்பதிவின் போது வாக்காளர்களுக்கு கையுறை..!

0 3285
தமிழகத்தில் வாக்குப்பதிவின் போது வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவின் போது வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு, தமிழகத்தில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

சனி, ஞாயிற்றுகிழமைகளில் வேட்பு மனுதாக்கல் செய்ய இயலாது என்ற அவர், வேட்பாளர்களுடன் இருவர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்யும் அறைக்குள் வரலாம் என்றார். மக்கள் ஆதார், டிரைவிங் லைசென்ஸ் உள்பட 11 அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றின் மூலம் வாக்களிக்கலாம் என்ற அவர், தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் 24 மணிநேரமும் மக்கள் தெரிவிக்கலாம் என்றார்.

முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் முழு உடல் கவச உடை அணிந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், ஓட்டு எண்ணிக்கை 76 மையங்களில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments