திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்பு

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்பு
திமுகவுடன் இன்று மாலை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்து பேசிய வேல்முருகன், திமுக மனமுவந்து எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் அதனை ஏற்போம் என்றார்.
திமுக ஒதுக்கும் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
Comments