திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல்

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல்
திமுக - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடையேயான 2-ம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் 4 தொகுதிகளை ஒதுக்குமாறு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், 3 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் இன்று மாலை திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவினரை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இன்றைய பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு, இருகட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments