அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நடிகர் கருணாஸ் திமுக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்

0 3388
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நடிகர் கருணாஸ் திமுக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ், வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்து, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை சந்தித்து சட்டமன்ற தேர்தலுக்கான ஆதரவு கடிதத்தை வழங்கினர்.

மேலும், திமுக கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்குமாறு, அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments