புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியிட ஆலோசித்து வருவதாக தகவல்

0 1489

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசின் தொகுதி பங்கீடு, முதலமைச்சர் வேட்பாளர் நிபந்தனைக்கு பா.ஜ.க. ஒப்புக் கொண்ட போதிலும், தனித்து போட்டியிட என்.ஆர்.காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 14 தொகுதிகள் என்.ஆர்.காங்கிரசுக்கும், 10 தொகுதிகள் பா.ஜ.க.வுக்கும், 6 தொகுதிகள் அதிமுகவுக்கும் என முதலில் பேசப்பட்டது. இதனை ஏற்க மறுத்த என்.ஆர்.காங்கிரஸ் தங்களுக்கு கூடுதலாக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியதோடு, முதலமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிக்க வலியுறுத்தியது.

இதனால் இழுபறி நீடித்தது. இந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ், கூட்டணியில் இருப்பதை பலமாக கருதும் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரசின் நிபந்த்தனைக்கு ஒப்புக் கொண்டு இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ.க. சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, என்.ஆர்.காங்கிரசுக்கு 17 தொகுதிகள், பா.ஜ.க.வுக்கு 7 தொகுதிகள், அதிமுகவுக்கு 6 தொகுதிகள் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 5 கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையிலும், பா.ஜ.க.வுடனான கூட்டணியை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தற்போது வரை உறுதி செய்யவில்லை. பா.ஜ.க.வின் அமித்ஷா உள்ளிட்ட மேலிட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் என்.ஆர்.காங்கிரஸ் ஒப்புக்கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. மக்கள் மனநிலைக்கேற்ப தனித்து போட்டியிட விரும்புவதாக என்.ஆர்.காங்கிரஸ் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments