மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 6 தொகுதிகள்: திமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்து

0 2317
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணனும் கையெழுத்திட்டனர். 

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 முதல் 12 தொகுதிகளை கேட்டது. ஆனால், முதலில் இருந்தே 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக திட்டவட்டமாக இருந்தது. இதனால் இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதி பங்கீட்டை சுமூகமாக முடித்துக் கொள்ளும் பொருட்டு, 10 லிருந்து 7 தொகுதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இறங்கி வந்தது. அதற்கும் திமுக ஒப்புக் கொள்ளாததால் மீண்டும் இழுபறி நீடித்து வந்தது. இந்த சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். இதில், 6 தொகுதிகளை ஏற்றுக் கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்ததை அடுத்து, இருகட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணனும் கையெழுத்திட்டனர்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தாங்கள் கேட்டதை விட குறைவான தொகுதிகளையே திமுக ஒதுக்கியுள்ளதாக கூறினார். இருப்பினும், அதிமுக - பா.ஜ.க. கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில், 6 தொகுதிகளை ஏற்றுக் கொண்டதாக கூறினார். கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணியில் இதுவரை 54 இடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 25 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. விசிக ஆகியவற்றுக்கு தலா ஆறு இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments