கூட்டணியில் இருந்து விலகுகிறதா தேமுதிக? நாளை காலை தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் அவசர கூட்டம் நடைபெறும் என விஜயகாந்த் அறிவிப்பு

0 4500
கூட்டணியில் இருந்து விலகுகிறதா தேமுதிக? நாளை காலை தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் அவசர கூட்டம் நடைபெறும் என விஜயகாந்த் அறிவிப்பு

திமுகவுடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது.

தேமுதிக 23 தொகுதிகள் கேட்பதாகவும், 17 சட்டமன்றத் தொகுதிகளுடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தர அதிமுக முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பல கட்டப் பேச்சுவார்த்தைக்கு பிறகும் தேமுதிகவுக்கான தொகுதிப் பங்கீட்டில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.

பாமக, பாஜகவுக்கு ஒதுக்கியதை விட குறைவான தொகுதிகளையே அதிமுக ஒதுக்க முன்வந்துள்ளதால் தேமுதிக அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேமுதிகவின் மாவட்ட செயலாளர்களின் அவசர கூட்டம் நாளை காலை நடைபெறுகிறது. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, தேமுதிக சார்பில் தேர்தலில்போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் 3-வது நாளாக நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments