ஈகுவடோரியல் கினியாவின் ராணுவ தள பகுதியில் வெடிகுண்டு தாக்குதல்: 20-க்கும் மேற்பட்ட மக்கள் பலி

0 958
ஈகுவடோரியல் கினியாவின் ராணுவ தள பகுதியில் வெடிகுண்டு தாக்குதல்: 20-க்கும் மேற்பட்ட மக்கள் பலி

த்திய ஆப்பிரிக்க நாடான ஈகுவடோரியல் கினியாவில் வெடிகுண்டு தாக்குதல் நடந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராணுவ தள பகுதியான பாடா (BATA) நகரத்தில் அதிபயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்த நிலையில் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் உருக்குலைந்து போய் உள்ளது.

தற்போது வரை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் ஈடுபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்டுகப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்லது. விண்ணை முட்டும் அளவுக்கு தீ எரிந்த நிலையில் தீயணைப்பு துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் தாக்குதலில் படுகாயமடைந்த மக்களுக்கு அதிகளவிலான ரத்தம் தேவைப்படுவதாக உள்ளூர் மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த மக்களை கொத்து கொத்தாக லாரிகளில் ஏற்றி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments