காஷ்மீரில் ஆயுதங்களுடன் காரில் சுற்றித் திரிந்த இருவர் கைது

0 802
காஷ்மீரில் ஆயுதங்களுடன் காரில் சுற்றித் திரிந்த இருவர் கைது

காஷ்மீரில் ஆயுதங்களுடன் காரில் சுற்றிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

குல்காம் மாவட்டம் வழியாக ஆயுதங்களுடன் கார் ஒன்று செல்வதாக வந்த தகவலையடுத்து அனந்தநாக் மாவட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சான்ட்ரோ காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் இருவரும் உத்தரப்பிரதேசம் பிஜ்னூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கியும் 20 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments