தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எத்தனை இடங்கள்? திமுக - மார்க்சிஸ்ட் இன்று உடன்பாடு?

0 913
தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எத்தனை இடங்கள்? திமுக - மார்க்சிஸ்ட் இன்று உடன்பாடு?

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சியுடன் இன்று உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் தி.மு.க. தலைமை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கீடு செய்வதற்கான உடன்படிக்கை நேற்று கையொப்பமானது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.

இதனிடையே, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியுடன் இன்று உடன்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளது. அக்கட்சிக்கு 6 தொகுதிகள் வரை வழங்க திமுக முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மொத்தமுள்ள 234 இடங்களில் 48 இடங்களை தி.மு.க. பகிர்ந்தளித்துள்ளது. காங்கிரசுக்கு 25 இடங்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. ஆகியவற்றுக்கு தலா ஆறு இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments